/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் இந்திய வீரர் 7 புள்ளியுடன் அசத்தல் வெற்றி
/
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் இந்திய வீரர் 7 புள்ளியுடன் அசத்தல் வெற்றி
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் இந்திய வீரர் 7 புள்ளியுடன் அசத்தல் வெற்றி
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் இந்திய வீரர் 7 புள்ளியுடன் அசத்தல் வெற்றி
ADDED : செப் 05, 2024 11:44 PM

கோவை;ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் புனேவை சேர்ந்த பார்கன்கர் அக்ஷய் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, அலங்கார் ஹோட்டலில் கடந்த, 30ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில், இந்திய நாட்டை சேர்ந்த ஆறு பேர், ரஷ்யா, ஸ்லோவாகியா, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என, 10 பேர் பங்கேற்றனர்.
நேற்றைய ஒன்பதாவது சுற்றில் ரஷ்யாவின் ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிடை, இந்தியாவின் ஹர்ஷத் வென்றார். தொடர்ந்து நடந்த போட்டியில், இந்தியாவின் ரோஹித், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லியையும் வென்றார்.
உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர் மற்றும் இந்தியாவின் பவார் ஹர்ஷித் இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இந்தியாவின் லோகேஷ் மற்றும் பார்கன்கர் அக்ஷய் இடையேயான போட்டியும், ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ் மற்றும் இந்தியாவின் தக்ஷின் அருண் ஆகியோர் இடையேயான போட்டியும் சமனில் முடிந்தது.
முடிவில், இந்தியாவின் பார்கன்கர் அக்ஷய், 7 புள்ளிகளுன் வெற்றி பெற்றார். இந்தியாவின் பவார் ஹர்ஷித், 6 புள்ளிகளும், ஹர்ஷத், 5.5 புள்ளிகளும், ரோஹித், 5 புள்ளிகள், ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், 4.5 புள்ளிகள் பெற்றனர்.
ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட், 4 புள்ளிகள், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், 4 புள்ளிகள், இந்தியாவை சேர்ந்த லோகேஷ், 4 புள்ளிகள், தக்ஷின் அருண், 4 புள்ளிகள், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, 1 புள்ளியும் பெற்றிருந்தனர்.
வெற்றி பெற்ற பார்கன்கர் அக்ஷய்க்கு, கோவையை சேர்ந்த இன்டர்நேஷனல் மாஸ்டர் ரத்தன்வேல் பரிசு வழங்கினார்.