/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி: கோவையில் இன்று துவக்கம்
/
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி: கோவையில் இன்று துவக்கம்
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி: கோவையில் இன்று துவக்கம்
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி: கோவையில் இன்று துவக்கம்
ADDED : ஆக 30, 2024 03:16 AM

கோவை,:தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, கோவை அலங்கார் ஹோட்டலில் இன்று துவங்கி, வரும் அக்., 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் மாணிக்கம் கூறியதாவது:
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26வது ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி கோவை அலங்கார் ஹோட்டலில் நாளை(இன்று) துவங்குகிறது. இன்டர்நேஷனல் மாஸ்டர்(ஐ.எம்.,) பதவி என்பது, 2,400 புள்ளிகள் எடுத்து மூன்று 'டைட்டில்' வாங்குபவர்களுக்கு கிடைக்கும்.
ஐ.எம்., வாங்கியவர்கள்தான் 'கிராண்ட் மாஸ்டர்' ஆக முடியும். தமிழக அரசானது, 100 'கிராண்ட் மாஸ்டர்'கள் உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதை சாத்தியமாகும் நோக்கில் கடந்த ஒரு வருடமாக இந்த செஸ் போட்டியை நடத்திவருகிறோம்.
இதுவரை, 25 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 26வது போட்டி நாளை(இன்று) ஆரம்பிக்கிறது. இதன் வாயிலாக இந்தியாவில் இதுவரை, 33 'நார்ம்ஸ்' வந்துள்ளது. இதில், 13 'நார்ம்ஸ்' தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.
இந்தியாவில், 3ல், 2 பங்கு 'நார்ம்ஸ்' இங்கிருந்துதான் வாங்கியுள்ளனர். அயல்நாடுகளுக்கு செல்லாமல் குறைந்த செலவிலேயே 'நார்ம்ஸ்'களை இங்கேயே வாங்க முடியும். சங்கமானது போட்டிகளை துவங்கியது முதல் இதுவரை நான்கு பேர் ஐ.எம்., பதவி வாங்கியுள்ளனர். சராசரியாக, கடந்த, 1960ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு ஐ.எம்., பதவி மட்டுமே வாங்கிவந்துள்ளனர்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களில் நாம் நடத்திய போட்டிகளில் நான்கு பேர் வாங்கியுள்ளனர். தற்போது நடக்கும் போட்டியில் இன்னும் இருவர் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.
ஆண்டுக்கு குறைந்தபட்சமாக, 10 பேர் ஐ.எம்., வாங்க முயற்சிகள் எடுத்துள்ளோம். இந்திய வீரர்களுக்கு இன்டர்நேஷனல் மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க துணை தலைவர்கள் அனந்தராம், விஜயராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

