/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுங்க! தம்மம்பதி மக்கள் வலியுறுத்தல்
/
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுங்க! தம்மம்பதி மக்கள் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுங்க! தம்மம்பதி மக்கள் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுங்க! தம்மம்பதி மக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2024 02:42 AM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி அருகே, தம்மம்பதியில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்,' என, அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் கொடுத்த மனுவில், 'நல்லுாத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் தொட்டிகளில் கடந்த மாதங்களில் பெய்த மழைநீர், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் மற்றும் கிணற்று நீர் கலந்து நிரப்பப்படுகின்றன.
இதனால், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும், குடிநீர் சுத்திகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.
* தம்மம்பதி பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, தம்மம்பதி கல்லாங்குத்து குடியிருப்பு பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தமிழக அரசு ஒதுக்கிய வீட்டு மனை கட்டும் திட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில், தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளையால் பாதிக்கப்பட்டு, பணத்தையும் இழந்து, தற்போது வீடு அஸ்திவார பணிகளோடு கடந்த, மூன்று ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது.
இது குறித்து, பலமுறை மனு கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. உடனடியாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு மின்வசதி ஏற்படுத்த வேண்டும்.
கல்லாங்குத்து, தம்மம்பதி கிராமங்களில், போர்வெல் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க வேண்டும். கிராமத்தை சுற்றிலும் தனியார் தோட்டங்களில் பல நுாறு குடும்பங்கள் வாழும் நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்க, 10 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். எனவே, ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
வேட்டைக்காரன்புதுார் சேத்துமடை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகள் சென்று வர அரசு பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

