/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் ரோட்டரி கிளப் தொடக்க விழா
/
மாணவர் ரோட்டரி கிளப் தொடக்க விழா
ADDED : ஜூலை 13, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;குனியமுத்துார், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ரோட்டரி கிளப் பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
பள்ளியின் அறங்காவலர் ரவீந்திரன் விழாவை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி இ-கிளப் ஆப் கோயமுத்துார் சேன்ஞ்மேக்கர்சை சேர்ந்த ஹென்றி அமல்ராஜ், பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள், ரோட்டரி கிளப்பின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினர்.
பள்ளி முதல்வர் கார்த்திகாயினி, துணை முதல்வர் யோகிதா, ஆலோசகர் பனீதா மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

