/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
60 நாளாகியும் ஊக்கத்தொகை கிடைக்கல; பால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு

ADDED : ஆக 29, 2024 10:23 PM
அன்னுார்: பால் வழங்கி, 60 நாட்களாகியும், ஊக்கத்தொகை கிடைக்காததால், பால் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில், பால் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிச.,18ம் தேதியிலிருந்து ஒரு லிட்டர் பாலுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் பிறகு நான்கு முறை மட்டுமே பாலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 1 முதல் இன்று (நேற்று) வரை ஊக்கத்தொகை வழங்கவில்லை.
இதுகுறித்து அன்னுார் பகுதி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,'ஆவினில் சராசரியாக ஒரு லிட்டர் பசும்பாலுக்கு, 35 ரூபாய் தருகின்றனர். கலப்பு தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. இந்நிலையில் அரசு மூன்று ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்ததால் சிறு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும்,ஊக்கத்தொகை வழங்கவில்லை. அரசு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.