/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடிகால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
/
வடிகால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
வடிகால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
வடிகால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
ADDED : மார் 07, 2025 10:41 PM

குடிமங்கலம்; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து மண் கொட்டுபவர்களால், மழைக்காலங்களில், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், உடுமலை உட்கோட்டத்தின் கீழ், புதுப்பாளையம் முதல் கொள்ளுப்பாளையம் வரையிலான பகுதி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், கொங்கல்நகரம் முதல் குடிமங்கலம் வரை பல்வேறு இடங்களில், நெடுஞ்சாலையை ஒட்டி, புதிதாக லே-அவுட்கள் அமைக்கப்படுகின்றன.
குறிப்பாக, சுங்காரமுடக்கு, வேலப்பநாயக்கன்புதுார் உள்ளிட்ட இடங்களில், நெடுஞ்சாலையை ஒட்டி, மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து மண் கொட்டி வழித்தடம் அமைத்துள்ளனர். ரோட்டோரத்திலுள்ள வடிகால் வழியாக மழைக்காலங்களில், மழை நீர் உப்பாறு ஓடைக்கு செல்லும்.
இதனால், ரோட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போது, ரோட்டோர வடிகால்கள் அனைத்தும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து பாதிக்கப்படும்.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, வடிகாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.