/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு
/
கால்நடைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு
ADDED : ஆக 06, 2024 05:49 AM
பாலக்காடு: கேரளாவில் உள்ள கால்நடை துறையின் சோதனை சாவடிகளில், நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், கால்நடை துறையின் சோதனை சாவடிகளில், கால்நடைகளை ஏற்றி வரும் லாரிகளுக்கான நுழைவு கட்டணம், 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.
கால்நடை துறை இணை இயக்குனர் அம்பிளி கூறியதாவது: சோதனைச் சாவடிகள் வாயிலாக, மாடு, ஆடு, பன்றி போன்ற கால்நடை ஒன்றுக்கு நுழைவு கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 53 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி, வாத்து, காடை போன்றவை ஒன்றுக்கான கட்டணம், ஒரு ரூபாயில் இருந்து, 1.05 ரூபாயாக ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் இன்றி இருந்த முட்டை ஒன்றுக்கு, 2 பைசா செலுத்த வேண்டும் எனவும் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, நிர்வாகக் கட்டணமாக மாடு ஒன்றுக்கு 15ல் இருந்து 27 ரூபாயும்; ஆடு, பன்றி போன்றவை ஒன்றுக்கு, 15ல் இருந்து 16 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இக்கட்டண உயர்வு, கடந்த, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.