ADDED : ஜூன் 27, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
கோவை: பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன.
இம்மாதத்தில் பட்டுக்கூடு உற்பத்திக்கு ஏற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்து, சேதாரமின்றி தரமான பட்டுக்கூடு கிடைக்கிறத. இதனால், பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைக்கிறது என, விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டு அங்காடியில் நடந்த ஏலத்தில் தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ ரூ.730, அடுத்த ரகம் ரூ.690க்கும் குறைந்தபட்சம் ரூ.628 விற்பனையானது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
