/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை சரிவால் ஏமாற்றம்
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை சரிவால் ஏமாற்றம்
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை சரிவால் ஏமாற்றம்
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை சரிவால் ஏமாற்றம்
ADDED : ஆக 21, 2024 11:52 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சராசரியாக இருக்கும் நிலையில், விலை சரிந்துள்ளது.
கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய தினசரி மார்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். தற்போது மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சராசரியாக உள்ள நிலையில், விலை சரிந்துள்ளது.
இந்த வாரம், செவ்வாழை ஒரு கிலோ - 70, நேந்திரன் - 55, கதளி - 50, ரஸ்தாளி மற்றும் பூவன் - 40, சாம்பிராணி வகை - 42 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, தற்போது செவ்வாழை மற்றும் ரஸ்தாளி - 10, பூவன் - 5, சாம்பிராணி - 3 ரூபாய் விலை சரிந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் வெளியூர் வரத்து குறைவாக இருந்ததால் வாழைத்தார் விலை அதிகரித்தது. தற்போது உள்ளூர் வரத்து அதிகமாக இருப்பதால், விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்,' என்றனர்.