/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாரல் மழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
சாரல் மழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : செப் 11, 2024 10:20 PM

வால்பாறை : வால்பாறையில் பெய்யும் சாரல் மழையினால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
வால்பாறையில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் சாரல்மழை பெய்யும் நிலையில், இடையிடையே வெயிலும் நிலவுவதால், தேயிலை செடிகள் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த சில நாட்களாக, சாரல்மழைக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன. பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 50 கிலோ தேயிலை பறிக்கின்றனர்,' என்றனர்.