/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இருசக்கர வாகனப் பேரணி
/
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இருசக்கர வாகனப் பேரணி
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இருசக்கர வாகனப் பேரணி
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இருசக்கர வாகனப் பேரணி
ADDED : ஆக 13, 2024 12:59 AM
கோவை:பா.ஜ., மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து இரு சக்கர வாகனப் பேரணி நடந்தது.
வாகனப் பேரணியின்போது, தேசியக் கொடியை ஏந்தியபடி, இளைஞர்கள் தேசத்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
கவுண்டம்பாளையம் தொகுதியில், கவுண்டம்பாளையத்தில் தொடங்கிய வாகனப் பேரணி, துடியலூர் சந்திப்பில் நிறைவடைந்தது.
கோவை தெற்கு தொகுதியில், சிவானந்தா காலனியில் துவங்கி, சித்தாபுதூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் நிறைவுற்றது.
கோவை வடக்கு தொகுதியில், கணபதி பஸ்ஸ்டாண்டில் துவங்கி, நல்லாம்பாளையம் ரயில்வே பாலம் அருகில் நிறைவுற்றது.
வாகனப் பேரணிக்கு, இளைஞரணி மாவட்டத் தலைவர் கிருஷ்ணபிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். பிரசாரப் பிரிவு மாநில செயலாளர் ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரீத்தி மற்றும் இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

