/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா
/
மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா
ADDED : ஆக 16, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நடந்த விழாவில், துணை மேயர் வெற்றிச்செல்வன் தேசியக் கொடி ஏற்றினார். மாநகராட்சி துணை கமிஷனர் சிவகுமார், மத்திய மண்டலத் தலைவர் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மரக்கன்று நடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மத்திய மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், சுதந்திர தின விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

