UPDATED : அக் 12, 2026 08:47 PM
ADDED : அக் 12, 2026 08:44 PM

அ நிறம் | அளவு
கோவை: சரவணம்பட்டி அம்புரோஸ் நகர் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சர்ச் தொடர்பாக, ஆர்.டி.ஐ., தகவல் கோரியும், மாநகராட்சியிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என இந்து முன்னணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில், 'சரவணம்பட்டி 42வது வார்டு பகுதியில் கட்டப்படும் கட்டடம் குறித்து ஜூலை 15ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கட்டடத்தில் சர்ச் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு ஆர்.டி.ஐ.,யில் தகவல் கேட்டும் பதில் இல்லை. போலீசில் புகார் அளித்தும் பயனில்லை. அனுமதியின்றி செயல்படும் தேவாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை’ என குறிப்பிட்டுள்ளனர்.
