/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்
/
தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்
தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்
தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்
ADDED : மே 04, 2024 01:36 AM
கோவை:தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கியதால், காற்றாலை மின்சார உற்பத்தி இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
இந்திய காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ காற்றால், மே முதல் நாளில், 1.42 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. இரண்டு நாட்களில், 2.3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
இந்த மின் உற்பத்தி, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீத பங்கு. வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது, நாள் ஒன்றுக்கு 100 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி இருக்கும்.
தமிழகத்தின் மின் தேவையில், காற்றாலை மின்சாரமும் பங்கு வகிக்கிறது. ஓரிரண்டு கி.மீ., வேகத்தில் வீசிய காற்று, தற்போது மணிக்கு 19 கி.மீ., வேகம் வரை வீச தொடங்கியுள்ளது.
இந்த காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் வெப்பநிலை குறையும். வெப்பத்தின் தாக்கம் குறையும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.