ADDED : ஆக 10, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
கோவை: கடற்படை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ரெட்பீல்ட்ஸ் ஐ.என்.எஸ். அக்ரானி முன் ஐ.என்.எஸ்., நீலகிரி போர்க்கப்பலின் மாதிரியை, வைஸ் அட்மிரல் சிவகுமார் திறந்து வைத்தார்.
ஐ.என்.எஸ். நீலகிரி, உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இது 2025 ஜன. 15ம் தேதி பிரதமர் மோடியால் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம், ஆயுதங்கள், சென்சார்கள், ரேடார், வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளுடன் உருவாக்கப்பட்டது.
கடல் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளை இக்கப்பல் கையாள முடியும்.
மகாராஷ்டிராவின் ரத்னகிரியை சேர்ந்த சிவாரெட்டி, நீலகிரி கப்பலின் மாதிரியை உருவாக்கியுள்ளார். கமோடோர் மன்மோகன் சிங், ராணுவம் மற்றும் விமானப்படை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
