/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
/
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 11:34 PM
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், காட்டுமாடு, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. பகல் நேரத்தில் வன விலங்குகள் நடமாடுவதால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'நீண்ட இடைவெளிக்கு பின், தொழிலாளர் தேயிலை பறிக்கும் பகுதியில் மீண்டும் கரடிகள் உலா வரத்துவங்கியுள்ளன.
பகல் நேரத்தில் தேயிலை காட்டில் கரடி நடமாடுவதாலும், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உலா வருவதாலும், பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.