/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கள்ளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்
/
கள்ளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்
கள்ளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்
கள்ளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 12:32 AM
- நமது நிருபர் -
கள்ளச்சாராயத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வலியுறுத்தியும், அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தி, 65 பேர் உயிரிழந்தனர். இது விஷயத்தில், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, அவிநாசி அத்திக்கடவு போராட்ட குழு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம், கிராமிய மக்கள் இயக்கம் ஆகியன சார்பில், அவிநாசியில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், கள்ளச்சாராயத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், கள்ளுக்கான தடையை விலக்க வேண்டும் ஆகியன குறித்து கோஷம் எழுப்பினர்.