ADDED : ஜூன் 08, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வராணிக்கு மாற்றாக, ஈரோடு வடக்கு இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு, போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
கோமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை மூலனுாருக்கும், சேலம் சிட்டி இன்ஸ்பெக்டர் முருகராஜன் கோமங்கலத்துக்கும் மாற்றப்பட்டனர். மகாலிங்கபுரம் செந்தில்குமார் மசினக்குடிக்கும், அரவங்காடு செல்லமணி மகாலிங்கபுரத்துக்கும் மாற்றப்பட்டனர்.
கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செல்வன் சிறுமுகைக்கும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் கிணத்துக்கடவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
