/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
/
உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
ADDED : மே 28, 2024 11:28 PM
பொள்ளாச்சி:தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஓழிப்பு பணிக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே, கொசு ஓழிப்பு பணிக்கு தயாராக இருக்கும் படியும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் படியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், பொள்ளாச்சி நகராட்சி; சமத்துார், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பேரூராட்சி; பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், துாய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் கொசு ஒழிப்பு பணியில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து தவறாமல் தெளிக்க வேண்டும். வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்த வேண்டும்.
குடியிருப்புகளிலும், சுற்றுப்பகுதியிலும் உடைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள், வீடுகளில் உள்ள உரல்கள், தகர டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள், காலி பாட்டில்களில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தால், அவற்றை அகற்ற வேண்டும்.
இவை உள்ளிட்ட பல்வேறு சுகாதார அறிவுரைகளை மக்களுக்கு வழங்க துாய்மைப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.