/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீத வரி வசூல் செய்ய ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்
/
100 சதவீத வரி வசூல் செய்ய ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்
100 சதவீத வரி வசூல் செய்ய ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்
100 சதவீத வரி வசூல் செய்ய ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 14, 2025 11:07 PM
சூலுார்; ''மார்ச் மாத இறுதிக்குள், வரியினங்களை, 100 சதவீதம் வசூலிக்க வேண்டும்,'' என,ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சூலுார் ஒன்றியத்தில், காடாவெட்டி பாளையம், பதுவம்பள்ளி உள்ளிட்ட, 17 ஊராட்சிகளும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், அப்பநாயக்கன்பட்டி, கள்ளப் பாளையம் உள்ளிட்ட, 20 ஊராட்சிகளும் உள்ளன. இம்மாத இறுதிக்குள் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ கூறுகையில், ''வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை, இம்மாத இறுதிக்குள் தீவிரமாக வசூலிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒலிப்பெருக்கி வாயிலாக வரியினங்களை செலுத்த வாகன பிரசாரம் செய்யப்படுகிறது. வீடு, வீடாக சென்றும் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.
ஊராட்சி அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார். இதுபோல், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.