/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவிரமடைந்துள்ள பருவமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு
/
தீவிரமடைந்துள்ள பருவமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு
தீவிரமடைந்துள்ள பருவமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு
தீவிரமடைந்துள்ள பருவமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஆக 01, 2024 01:51 AM

கோவை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த இரு மாதங்களாக கோவையில் குறிப்பிட்ட அளவு மழைப்பொழிவு உள்ளது.
மழையின் காரணமாக, ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்தன. இந்நிலையில், ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழையால் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு, அதிக மழை கிடைத்தது. இதன் காரணமாக, குளங்கள் அதன் முழுக்கொள்ளளவை எட்டின.
கோவையில் கடந்த இரு தினங்களாக, மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில், மழைப்பொழிவு அதிகம் உள்ளது. இதனால், நொய்யலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு, புட்டுவிக்கி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து சென்றது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால், நொய்யலில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.