/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா' போட்டி
/
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா' போட்டி
ADDED : மார் 03, 2025 04:13 AM

கோவை : 'செபக்தக்ரா' போட்டியில் சர்வஜன 'ஏ' அணி, 15-9 என்ற புள்ளிகளில் கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., 'பி' அணியை வீழ்த்தியது.
'செபக்தக்ரா' அல்லது 'கிக் வாலிபால்' என்று அழைக்கப்படும் விளையாட்டு மலேசியா, தாய்லாந்து நாடுகளில் மிகவும் பிரபலம். இந்தியாவில் ஆங்காங்கே விளையாடப்பட்டு வருகின்றன. கையால் அடித்து விளையாடும் வாலிபால் விளையாட்டில், கால்களை மட்டும் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்.
இந்த விளையாட்டு போட்டிகளை, கோவையில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் ஆண்டுதோறும் நடத்திவருகின்றனர். தற்போது, 18வது மாநிலங்களுக்கு இடையேயான 'செபக்தக்ரா' போட்டி, கடந்த பிப்., 28ம் தேதி முதல் நடந்து வருகிறது.
ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. ஜூனியர் பிரிவில், ஜெயந்திரா 'சி' அணி, 15-13 என்ற புள்ளி கணக்கில் சர்வஜன ஏ அணியையும், ஜெயந்திரா பி அணி, 15-11 என்ற புள்ளிகளில், சர்வஜன 'பி' அணியையும் வென்றன.
கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., அணி, 15-6 என்ற புள்ளிகளில் கிங்ஸ் அணியையும், சர்வஜன 'ஏ' அணி, 15-9 என்ற புள்ளிகளில் கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., பி அணியையும் வீழ்த்தின. சீனியர் பிரிவில், கிங்ஸ் யுனைடெட் அணி, 15-12 என்ற புள்ளிகளில், தக்ரா ஸ்பார்டன்ஸ் அணியை வென்றது.
கிராவிட்டி பைட்டர்ஸ் அணி, 15-7 என்ற புள்ளிகளில், தக்ரா ஸ்பார்டன்ஸ் அணியையும், பிளையிங் டிராகன்ஸ் அணி, 15-3 என்ற புள்ளிகளில் டேக்ட் அணியையும், பிரதர்ஸ் ஆர்ம்ஸ் அணி, 15-9 என்ற புள்ளிகளில், தக்ரா பால்கன்ஸ் அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.