/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடைய அழைப்பு
/
பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடைய அழைப்பு
ADDED : செப் 10, 2024 02:22 AM
பொள்ளாச்சி;''பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம்,'' என, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் அறிக்கை:
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் விவசாயிகள், தக்காளி, கத்தரி, மரவள்ளி, மஞ்சள், மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நிலவும் மாறுபட்ட கால சூழ்நிலையில் இருந்து பயிர்களை காத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம்.
கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் வாழை ெஹக்டேருக்கு, 7,258- ரூபாயும், மரவள்ளி பயிருக்கு, 4,248 ரூபாயு-ம், மஞ்சள் பயிருக்கு, 10,491 ரூபாய் பிரீமியம் தொகையாக செப்., 16ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மழையினாலோ, இயற்கை சீற்றத்தினாலோ பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் பயிர்களுக்கு ஏதேனும் இழப்பீடு ஏற்பட்டால், இழப்பீட்டுத் தொகை காப்பீடு நிறுவனத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
சூறாவளி காற்றினால் வாழை பயிருக்கு ஏற்படும் சேதத்திற்கு மட்டும் இழப்பீடு இல்லை. எனவே, மேற்கண்ட பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.