sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு! கைரேகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

/

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு! கைரேகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு! கைரேகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு! கைரேகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி


ADDED : மே 01, 2024 11:13 PM

Google News

ADDED : மே 01, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : வரும், 13ம் தேதி முதல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து முழுநேர ரேஷன் கடைகளிலும், கண் கருவிழி பதிவு செய்து உணவுப்பொருள் வழங்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.

தமிழகத்தில், ஆதார் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், கைரேகை பதிவு மூலம் கார்டுதாரரின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதற்காக அனைத்து ரேஷன்கடைகளிலும், கைரேகை பதிவுடன் கூடிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கைரேகை பதிவில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, கண் கருவிழி பதிவு செய்து, ரேஷன் கார்டுதாரர்களின் விபரங்களை உறுதிப்படுத்தும் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

கண் கருவிழி பதிவு செய்யும் கருவி மற்றும் கைரேகை பதிவு, ரசீது வழங்கும் அம்சங்களை உள்ளடக்கிய 'பாய்ன்ட் ஆப்சேல்' கருவி, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

சோதனை ஓட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 60 முதல் 70 ரேஷன் கடைகளுக்கு, கருவிழி பதிவு கருவி மற்றும் புதிய பாய்ன்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,135 ரேஷன் கடைகளில், 8 லட்சத்து 15 ஆயிரத்து 506 கார்டுதாரர்கள் உள்ளனர். முதல்கட்டமாக, கடந்த 2023 டிச., மாதம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் 25; காங்கயத்தில் 45 என, 70 ரேஷன் கடைகளுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டது.

'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் கை ரேகை பதிவு செய்தும், கை ரேகை பதிய முடியாதோருக்கு கருவிழி பதிவு வாயிலாக, உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, கருவிழிப்பதிவு நடைமுறையை, அனைத்து ரேஷன்கடைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, அனைத்து முழு நேர ரேஷன்கடைகளுக்கும் கருவிழிப்பதிவு கருவி வழங்கப்பட உள்ளது. திருப்பூரில், 880 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன; சோதனை ஓட்டமாக, ஏற்கனவே, 70 ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள, 810 ரேஷன் கடைகளுக்கு, வரும், 13ம் தேதி முதல், கருவிழி பதிவு கருவி மற்றும் புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து கருவிகள் தருவிக்கப்பட்டு, மாவட்ட வழங்கல் பிரிவு வாயிலாக, அனைத்து ரேஷன்கடைகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.

கருவிழி பதிவு வாயிலாக, கை ரேகை பதிவு செய்ய முடியாத முதியவர்களுக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள் விலகுகிறது.

புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியிலேயே ரசீது அச்சிடப்படுவதால், ரேஷன் பணியாளர்களுக்கு, உணவுப்பொருட்களின் பெயர், விலை விவரங்களை கையால் எழுத வேண்டிய சிரமம் தவிர்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us