/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூர், சோமனூர் ஸ்டேஷன் நடை மேடை உயரமாகிறது
/
இருகூர், சோமனூர் ஸ்டேஷன் நடை மேடை உயரமாகிறது
ADDED : பிப் 21, 2025 11:21 PM
சூலுார்; சோமனுார் மற்றும் இருகூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நடை மேடையின் உயரத்தை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் ரயில்வே வழிதடத்தில் இருகூர், சூலுார் மற்றும் சோமனுார் ரயில்வேஸ்டேஷன்கள் உள்ளன. இருகூரில் சரக்கு முனையம் உள்ளது. மூன்று ஸ்டேஷன்களிலும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன.
இருகூர் மற்றும் சோமனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள நடைமேடை உயரம் குறைவாக இருப்பதால், ரயிலில் ஏறவும், இறங்கவும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து, இருகூர், சோமனூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடைகளின் உயரத்தை அதிகரிக்க, ஆறு கோடியே, 42 லட்சம் ரூபாயை ரயில்வே துறை ஒதுக்கி உள்ளது. பணிகளை விரைந்து துவக்க உத்தரவிட்டுள்ளது.