/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் தொழில் பேட்டை அவ்வளவுதானா? காற்றில் பறந்தது எம்.பி., ராஜா அளித்த வாக்குறுதி

ADDED : மார் 30, 2024 11:44 PM
அன்னூர்;அன்னூர் வட்டாரத்தில் கம்பெனி நிலத்தில், தொழில் பேட்டை அமைக்கப்படும் என, நீலகிரி எம்.பி., ராஜா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அன்னூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னூர் தாலுகாவில், வடக்கு பகுதியில், பெரிய தொழிற்சாலைகள் இல்லை. தொழிலில் பின்தங்கி உள்ளது.
இப்பகுதி மக்கள், பிழைப்புக்கு வேலை தேடி கோவை மற்றும் திருப்பூர் செல்கின்றனர்.
பசூர் உள்ளிட்ட சில ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசுக்கும் அனுப்பி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், 2022ல் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) சார்பில், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 6 ஊராட்சிகளில் 3851 ஏக்கரில் தொழில்பேட்டை வளாகம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அப்போது நீலகிரி எம்.பி., ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
அப்போது எம்.பி., ராஜா, பொதுமக்களிடம், 'விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. கம்பெனி நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்' என உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகு, ஒன்றரை ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.