/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுக்கழிப்பிடம் பரிதாபம் உறங்குதா பேரூராட்சி நிர்வாகம்?
/
பொதுக்கழிப்பிடம் பரிதாபம் உறங்குதா பேரூராட்சி நிர்வாகம்?
பொதுக்கழிப்பிடம் பரிதாபம் உறங்குதா பேரூராட்சி நிர்வாகம்?
பொதுக்கழிப்பிடம் பரிதாபம் உறங்குதா பேரூராட்சி நிர்வாகம்?
ADDED : ஆக 14, 2024 12:58 AM

தொண்டாமுத்தூர்:கெம்பனூரில், பொதுக்கழிப்பறை புதர்மண்டி உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகி வருகிறது.
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனூரில் உள்ள தெற்கு அண்ணா நகரில், சுமார், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் குடிசை மாற்று வாரியம் சார்பில், பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது.
நாளடைவில், முறையாக பராமரிக்காததால், தற்போது, கழிப்பறை முழுவதும், செடி, கொடி முளைத்து, புதர் மண்டி உள்ளது. இதனால், வீட்டில், கழிப்பறை வசதி இல்லாத மக்கள், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, புதர் மண்டி கிடக்கும் பொதுக்கழிப்பறையை பராமரித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.