/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காத்திருந்து செல்வது பாதுகாப்பானது வனத்துறை எச்சரிக்கை
/
காத்திருந்து செல்வது பாதுகாப்பானது வனத்துறை எச்சரிக்கை
காத்திருந்து செல்வது பாதுகாப்பானது வனத்துறை எச்சரிக்கை
காத்திருந்து செல்வது பாதுகாப்பானது வனத்துறை எச்சரிக்கை
ADDED : மார் 23, 2024 10:51 PM

கூடலூர் ; - முதுமலையில் சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகிறது.
முதுமலையில் முக்கிய நீராதாரமான மாயார் ஆற்றை நோக்கி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வர துவங்கியுள்ளது.
இங்கு வரும் வன விலங்குகள் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அவ்வப்போது மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.
வனத்துறையினர் கூறுகையில், 'யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதால், முதுமலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் வன விலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது. இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
யானைகள் சாலை ஓரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் போது காத்திருந்து செல்வது பாதுகாப்பானது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்.

