sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாம்பார், அவியல் ஆசைதீர சாப்பிட நேரம் வந்தாச்சு! வீழ்ந்தது காய்கறி விலை  * வியாபாரிகள் கவலை

/

சாம்பார், அவியல் ஆசைதீர சாப்பிட நேரம் வந்தாச்சு! வீழ்ந்தது காய்கறி விலை  * வியாபாரிகள் கவலை

சாம்பார், அவியல் ஆசைதீர சாப்பிட நேரம் வந்தாச்சு! வீழ்ந்தது காய்கறி விலை  * வியாபாரிகள் கவலை

சாம்பார், அவியல் ஆசைதீர சாப்பிட நேரம் வந்தாச்சு! வீழ்ந்தது காய்கறி விலை  * வியாபாரிகள் கவலை


ADDED : ஆக 23, 2024 09:01 PM

Google News

ADDED : ஆக 23, 2024 09:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவைக்குத் தேவையான நாட்டுக்காய்கறி, புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி பகுதிகளில் இருந்தும் தருவிக்கப்படுகின்றன.

கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், டர்னிப், நுால்கோல் போன்றவை, நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம், கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகளில் இருந்தும், பெரிய வெங்காயம் மஹாராஷ்டிராவில் இருந்தும், விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன், காய்கறி விலை அபரிமிதமாக இருந்தது; தற்போது பாதியாக குறைந்திருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை வெகுவாக பாதித்திருக்கிறது.

காரணம் என்ன?


கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

அகில இந்திய அளவில் மழை காரணமாக, காய்கறி சாகுபடி மிகவும் குறைவாக இருந்ததால், விலை அபரிமிதமாக உயர்ந்திருந்தது. அதே சமயம், மழையில் கிடைத்த தண்ணீர் காரணமாக, காய்கறி அதிகளவில் விளைவிக்கப்பட்டன; உற்பத்தி அதிகமாக கிடைத்தது.

மூன்று மாதத்துக்கு முன், பெரிய வெங்காயம் 20 - 30 ரூபாயாக இருந்தது; இப்போது, கிலோ, 45 ரூபாய். இவ்விலை மேலும் இரு மாதங்களுக்கு தொடரும். ஏனெனில், மஹாராஷ்டிரா சீசன் முடிவடைந்திருக்கிறது.

தக்காளி விலை மாறும்


இனி, நவ., - டிச., மாதங்களில் தான் பெரிய வெங்காயம் வரும். தமிழகத்தில் விளைவிக்கக் கூடிய சின்ன வெங்காயம் 70 - 80 ரூபாயாக இருந்தது. பரவலாக புது சீசன் துவங்கியிருப்பதால், 40 ரூபாயாக குறைந்திருக்கிறது. மழை பெய்யும் சமயங்களில் தக்காளி விலையில் மாற்றம் ஏற்படும். 80 ரூபாயாக இருந்த தக்காளி விலை, 25 ரூபாயாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே உருளைக்கிழங்கு விளைகிறது; இந்த கிழங்கு கிலோ, 90 ரூபாய். ஏற்றுமதிக்கும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கு மட்டுமே ஊட்டி உருளைக்கிழங்கு செல்லும். மண்ணுக்கு மேலே உள்ள காய்கறி, மழைக்காலத்தில் 'டேமேஜ்' ஆகி, வரத்து குறையும்; அதனால், 500 கி.மீ., சுற்றளவுக்கே அனுப்பி வைக்கப்படும்; வெகுதொலைவுக்கு செல்லாது. நிலத்துக்கு கீழே உள்ள கிழங்கு வகைகள், தண்ணீர் அதிகமாக கீழிறங்கினால் மட்டுமே சேதமாகும்.

கேரளாவுக்கு லோடு குறைவு


கேரளாவில் பெய்த அடை மழை மற்றும் வயநாடு நிலச்சரிவால், வியாபாரம் குறைந்திருக்கிறது. கோவைக்கு, 100 லோடு காய்கறி வரும். அதில், 90 லோடு கேரளாவுக்குச் செல்லும்.

இப்போது, 40 லோடு வந்தாலும், 25 லோடு மட்டுமே கேரளாவுக்குச் செல்கிறது; 15 லோடு காய்கறி தேக்கமாகின்றன. அதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

விலை குறைவது ஏன்?


வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் ஹனீபா கூறுகையில், ''வெயில் காரணமாக சில காய்கறிகள் காய்ந்தன. மீண்டும் துளிர்த்து வரக்கூடிய காலத்தில், மழையால் பாதிக்கப்பட்டன. வெங்காயம் வரத்து இருப்பதால், விலை குறைந்து வருகிறது. பெரிய வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், விலை ஏறுகிறது. 150 ரூபாய் வரை விற்கக் கூடிய பீன்ஸ், 40 ரூபாயாக குறைந்திருக்கிறது. தக்காளி, 10 - 15 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகள் சங்கடப்படுகிறார்கள்.

விவசாயம் குறைந்தது


நீலகிரியில், 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் புரோகோலி, சுக்குனி, ஐஸ்பெர்க், லெட்யூஸ், பிரஸ்ஸல்ஸ், செலரி, பார்செலி,' உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு நிலவும் காலநிலை மாற்றத்தால், மலை காய்கறி விளைச்சல் குறைந்திருக்கிறது; அதனால், விலை உயர்ந்துள்ளது.

ஊட்டி மார்க்கெட்டில் தரம் பிரிக்கப்படும் மலை காய்கறிகள், நாள்தோறும், 40 டன் அளவுக்கு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நடப்பாண்டு மார்ச் இறுதியில் இருந்து தொடரும் மழையால், மலை காய்கறி விவசாயம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, சில மாதங்களாக அதிகபட்சம், 25 டன் அளவுக்கு மலை காய்கறி ஊட்டி மார்க்கெட்டில் இருந்து வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

விலை உயர்ந்து விட்டது

ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில், ''மூன்று மாதத்துக்கு முன்பு, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஊட்டி பூண்டு, 400 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது. முட்டைகோஸ், 10 ரூபாய் உயர்ந்து, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,'' என்றார்.

விவசாயிகளுக்கு 'பேக்கிங்', 'டிரான்ஸ்போர்ட்டிங்' மற்றும் போதுமான இட வசதி செய்து கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உணவுப் பொருட்களுக்கு, 'டிமாண்ட்' இருக்கிறது. இதில், காய்கறிக்கு மட்டும் அரசு போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதே, எங்களது கருத்து.

- - ராஜேந்திரன், தலைவர்

தியாகி குமரன் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம்

காய்கறி விலை ரூபாயில் ஒப்பீடு (கிலோவுக்கு)

காய்கறி பெயர்/ மூன்று மாதத்துக்கு முன் விலை/ தற்போதைய விலைபெரிய வெங்காயம் - 45 - 25சின்ன வெங்காயம் - 70 - 40பச்சை மிளகாய் - 140 - 60முட்டைகோஸ் - 40 - 22பீட்ருட் - 60 - 30கேரட் - 70 - 110பீன்ஸ் - 140 - 40முருங்கைக்காய் - 120 - 40பாகற்காய் - 80 - 40புடலங்காய் - 60 -30சுரைக்காய் - 55 - 30பீர்க்கங்காய் - 80 - 30இஞ்சி - 200 - 150தக்காளி - 80 - 25



வரத்துக்கேற்ப விலை

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் நிஷார் கூறியதாவது:-நமது நாட்டில் மிகப்பெரிய உருளைக்கிழங்கு மார்க்கெட்டாக மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கிருந்து வியாபாரிகள் ஏலம் எடுத்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் ஊட்டி உருளைக்கிழங்குகள், இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது.கிழங்குகளின் வரத்துக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படும். மூன்று மாதத்துக்கு முன், 500 மூட்டைகள் வந்தது; ஒரு மூட்டை, 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விலை போனது. தற்போது, 1,500 மூட்டைகள் வருவதால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை போகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us