/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூட்டுவலி இனி இல்லை கே.எம்.சி.எச்.,ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
/
மூட்டுவலி இனி இல்லை கே.எம்.சி.எச்.,ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
மூட்டுவலி இனி இல்லை கே.எம்.சி.எச்.,ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
மூட்டுவலி இனி இல்லை கே.எம்.சி.எச்.,ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
ADDED : மார் 06, 2025 10:16 PM

மூட்டு தேய்மானத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், தடுக்கவும் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பலன் அளித்து வருகிறது.
ரோபோடிக் மூட்டு மாற்று கருவி வாயிலாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில், மென்மையான திசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுகிறது, என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூட்டுத்தேய்மானம் வரக்கூடியதுதான். 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேய்மானம் அல்லது வலி ஏற்பட்டால் அது விளையாட்டு அல்லது விபத்துகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக இருக்கலாம்.
40 வயதுக்கு மேல் பலருக்கு மூட்டு ஜவ்வுகளில் சிதைவுகள் ஏற்படலாம்; தேய்மானம், ஜவ்வு தசைகள் பிய்ந்து விடும். ஜவ்வு தசைகள் பிய்ந்து போனால், விரைவில் மூட்டு தேய்ந்து விடும். குறிப்பாக, மூட்டு பகுதி யில் உள்ள மெனிஸ்கஸ்என்ற ஜவ்வு தேய்ந்து பிய்ந்து விடுவதால், மூட்டுகளில் வலி, நடக்க சிரமம், வீக்கம், கால்களை மடக்கி நீட்டுவதில் சிரமம் ஏற்படும்.
இப்பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்வது அவசியம். பரிசோதனையில், முற்றிலுமாக எலும்பு தேய்மானம் கண்டறியப்பட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.
கே.எம்.சி.எச்.,ல் உள்ள ரோபோடிக் மூட்டு மாற்று கருவி வாயிலாக, 750க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இக்கருவியில், அறுவை சிகிச்சை சுலபமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, சிகிச்சைக்குப்பின் குறைவாக வலி மற்றும் மெல்லிய திசுக்கள் பாதுகாக்கப்படுவதுடன், நோயாளிகள் விரைவில் குணமடையவும் இச்சிகிச்சைமுறை உதவுகிறது.
கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைமுகாம், மார்ச் 1ல் துவங்கியது. ஏப்ரல் 30ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்போருக்கு கட்டணத்தில் 20 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.