/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கொடுப்பதில் மகிழ்ச்சி' உலக சாதனை நிகழ்வு
/
'கொடுப்பதில் மகிழ்ச்சி' உலக சாதனை நிகழ்வு
ADDED : செப் 03, 2024 11:20 PM

கோவை:அவினாசிலிங்கம் பல்கலையின் என்.எஸ்.எஸ்., சார்பில், 'கொடுப்பதில் மகிழ்ச்சி' எனும் பெயரில், உலக சாதனை நிகழ்வு நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், 2,000க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவியர், அனைவருக்கும் கல்வி(EDUCATION FOR ALL) என்ற மனித உருவ வடிவமைப்பில் நின்று, கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். மேலும், 5,000 புத்தகத்தை கொண்டு புத்தக வடிவில் உருவம் உருவகப்படுத்தப்பட்டது.
துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் கூறுகையில், ''புத்தக தான நிகழ்வின் வாயிலாக, என்.எஸ்.எஸ்., மாணவியர் ஒவ்வொருவரும் தலா ஒரு புத்தகம், என 5,000க்கு மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.
இப்புத்தகங்கள் நலப்பணித் திட்டத்தின் கீழ், தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளி, பொது நூலகத்துக்கு, 'அவினாசிலிங்கம் அய்யாவின் கிராம நூலகம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது.
'என்.எஸ்.எஸ்., டிஜிரேட்' என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில், 500 மின்-புத்தகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ராதா வரவேற்றார். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா ஆகியோர் பங்கேற்றனர்.