/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தசாமி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
/
கந்தசாமி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
கந்தசாமி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
கந்தசாமி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
ADDED : மே 12, 2024 11:39 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
மாணவர் தன்வந்த், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலும், லோக் ஷா தர்ஷினி, அறிவியல் பாடத்திலும், 'சென்டம்' பெற்று, 495 மதிப்பெண்களுடன் பள்ளியின் முதலிடத்தை பிடித்தனர்.
சந்திரஹரி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், 100 மதிப்பெண்கள் பெற்று, 492 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும்; சமிக் ஷா, தரணீஷ் ஆகியோர், கணித பாடத்தில், 100 மதிப்பெண்கள் எடுத்து, 488 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
கணிதம் - 8 பேர், அறிவியல் - 3, சமூக அறிவியலில், 3 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் சண்முகம், செயலர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.