/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தசாமி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
கந்தசாமி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
கந்தசாமி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
கந்தசாமி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 07, 2024 10:45 PM

பொள்ளாச்சி:ஆனைமலை அருகே, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 58 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதி, சிறந்த மதிப்பெண்கள் பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளியில், மாணவி சம்யுக்தா - 586 மதிப்பெண் பெற்றார். அவர், கணித பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடமும் பெற்றார். பரணி - 585, வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மாணவி திவ்யா - 584 மதிப்பெண்கள் பெற்று, வணிகவியல், கணினி பயன்பாடு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண்களை பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.
மேலும், பள்ளியில், 36 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேலும், 49 மாணவர்கள், 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவியரை பள்ளி முதல்வர் சண்முகம், செயலர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.

