/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சப்பள்ளி தொழிலாளர்களுக்கு 4 மாதமாக சம்பளம் கிடைக்கலை
/
கஞ்சப்பள்ளி தொழிலாளர்களுக்கு 4 மாதமாக சம்பளம் கிடைக்கலை
கஞ்சப்பள்ளி தொழிலாளர்களுக்கு 4 மாதமாக சம்பளம் கிடைக்கலை
கஞ்சப்பள்ளி தொழிலாளர்களுக்கு 4 மாதமாக சம்பளம் கிடைக்கலை
ADDED : பிப் 21, 2025 11:14 PM
அன்னுார்; 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.
தினமும் சராசரியாக 1,500 பேர் பணி புரிகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட பணியை முடித்தவர்களுக்கு, 319 ரூபாய் தினசரி சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கஞ்சப்பள்ளி ஊராட்சி விவசாயத் தொழிலாளர்கள் கூறுகையில், '100 நாள் வேலை திட்டத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் ஏழை எளிய மக்கள்.
இந்த சம்பளத்தில் தான் குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என நான்கு மாதங்கள் ஆகியும் வேலை செய்ததற்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்கின்றனர்.
தற்காலிக ஏற்பாடாக தமிழக அரசே நிதியை தொழிலாளர்களுக்கு விடுவித்து மத்திய அரசிடமிருந்து நிதி வந்த பிறகு அதை ஈடு கட்டிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வர வேண்டி உள்ளது. சம்பளம் வராததால் கடும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என கண்ணீருடன் தெரிவித்தனர்.