/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாக்கிங்' சென்ற 'கொம்பன்' யானை ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்
/
'வாக்கிங்' சென்ற 'கொம்பன்' யானை ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்
'வாக்கிங்' சென்ற 'கொம்பன்' யானை ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்
'வாக்கிங்' சென்ற 'கொம்பன்' யானை ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்
ADDED : ஆக 31, 2024 02:07 AM

வால்பாறை;வால்பாறை அருகே, காலை நேரத்தில் 'வாக்கிங்' சென்ற யானையை கண்டு, தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், வனங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால், தமிழக கேரள எல்லையில் உள்ள வால்பாறைக்கு, யானைகள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன.
இந்நிலையில், நேற்று முன் தினம் வால்பாறையிலிருந்து பாலாஜிகோவில் செல்லும் வழியில் உள்ள, பச்சமலை நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், 'கொம்பன்' யானை காலை நேரத்தில் ஒய்யாரமாக வாக்கிங் சென்றது.
இதை சுற்றுலாபயணியர் படம் எடுத்தனர். காலை நேரம் என்பதால், அந்த வழியாக தேயிலை பறிக்கச்சென்ற தொழிலாளர்கள், யானையைக்கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் தேயிலை காட்டில் உலா வரும் யானைகளை பொதுமக்கள் தொந்தரவு செய்யக்கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், தொழிலாளர்கள் கவனமாக செல்ல வேண்டும். சுற்றுலாபயணியர் யானையின் அருகில் சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தொழிலாளர்கள் காயம்
வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட். இங்குள்ள 10 நெம்பர் தேயிலை காட்டில், தொழிலாளர்கள் நேற்று வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியிலிருந்து, கூட்டமாக யானை வருவதைக்கண்ட பணி மேற்பார்வையாளர், தொழிலாளர்களை வரச்சொல்லி சப்தமிட்டார். இதைக்கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் சித்ராதேவி, 40, ராணி, 49. ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இருவரும், கருமலை எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தொழிலாளர்களை யானை விரட்டிய சம்பவம், வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.