/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி சுற்றுலா சென்ற ஆசிரியருக்கு பாராட்டு
/
கல்வி சுற்றுலா சென்ற ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : மே 01, 2024 11:11 PM
உடுமலை : கல்வி சுற்றுலா சென்ற கனவு ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களை, மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் மற்றும் கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் உள்ள கலாசாரம், வாழ்வியல் முறைகளை கற்றுக்கொடுப்பதற்கான சிறப்பு ஏற்பாடாகவும் கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
இரண்டு பிரிவுகளாக ஆசிரியர்கள் 5 நாட்கள் சுற்றுலா சென்றனர். அதில் உடுமலை கோட்டத்தில் எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகுதிக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்.
ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

