/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 'சாம்பியன்'
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 'சாம்பியன்'
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 'சாம்பியன்'
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : மார் 12, 2025 11:31 PM
கோவை; 'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு இடையேயான 'கோவை டைஸ்' போட்டி, சி.ஐ.டி., கல்லுாரியில், இரு நாட்கள் நடந்தது. இதில், 20 அணிகள் பங்கேற்றன. இரண்டாம் சுற்றில், கே.ஐ.டி., கிரிக்கெட் அணியும், ஜி.சி.டி., சி.சி., அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கே.ஐ.டி., அணி, 17.3 ஓவர்களில், 10 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜி.சி.டி., அணி, 11.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 68 ரன்கள் எடுத்தது. எஸ்.ஆர்.ஐ.டி., அணியும், சி.ஐ.டி., சி.சி., அணியும் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.ஆர்.ஐ.டி., அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 74 ரன்கள் எடுத்தது.
சி.ஐ.டி., அணி, 10.4 ஓவரில் இரு விக்கெட்டுக்கு, 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், குமர குரு தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், ஜி.சி.டி., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குமரகுரு கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுக்கு, 237 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஜி.சி.டி., சி.சி., அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 86 ரன்கள் எடுத்தது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியும், சி.ஐ.டி., சி.சி., அணியும் மோதின.
முதல் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 20 ஓவர்களில் இரு விக்கெட் இழப்புக்கு, 127 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சி.ஐ.டி., சி.சி., அணி, 19 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.