/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நித்தீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
/
நித்தீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 12, 2024 12:05 AM
நெகமம்;நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், வரும் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா, வரும், 14ம் தேதி துவங்குகிறது. மாலை, 3:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், தீபாராதனை நடக்கிறது.
வரும், 15ம் தேதி, காலை திருமுறை பாராயணம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி, காலை நவக்கிரக ஹோமம், சுவாமி எந்திரத்துக்கு மூல மந்திர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. மாலையில், உத்தமபத வாஸ்து சாந்தி, தீபஸ்தாபனம் நடக்கிறது.
17ம் தேதி, காலை திருமுறை பாராயணம், சம்ஹிதா ஹோமம், கோபுர கலசம் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. இரவு பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. 18ம் தேதி, காலை மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு கலாகர்ஷணம் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், முதல் கால யாக பூஜை நடக்கிறது.
19ம் தேதி, காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 20ம் தேதி, காலை நான்காம் கால யாக பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.
21ம் தேதி, காலை ஆறாம் கால யாக பூஜை, காலை 9:00 மணிக்கு, கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு, விமானங்கள் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நடக்கிறது.

