/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கும்பாபிஷேக நிறைவு திருவிளக்கு வழிபாடு
/
கும்பாபிஷேக நிறைவு திருவிளக்கு வழிபாடு
ADDED : ஆக 06, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் பால விநாயகர் கோவிலில் மூன்றாவது, கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
பால விநாயகர், கன்னிமூல கணபதி, வேணுகோபால கிருஷ்ணர், ஆஞ்சநேயர், நவகிரக நாயகர்கள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி நடந்த மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, பெரியபுராணம் பாடல்கள் பாடப்பட்டன. விழாவில், தம்பு பள்ளி தமிழாசிரியர் விவேகானந்தரின் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.