/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் திருட்டு; டிப்பர் லாரி பறிமுதல்
/
மண் திருட்டு; டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : செப் 14, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் துடியலூர், பன்னிமடை ரோட்டில் பழனி கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எவ்வித அனுமதியும் இல்லாமல், 3 யூனிட் கிராவல் மண் திருடி வந்த சாலமன்ராஜ், 36, பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சாலமன்ராஜை கைது செய்தனர். மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.