ADDED : ஜூன் 19, 2026 02:40 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை தனியார் கலையரங்கில், சட்டம் பழகு சமூக நல அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு அமைப்பு செயலாளர் தனுஷ் தலைமை வகித்தார். பொருளாளர் தீபக், செயற்குழு உறுப்பினர்கள் சுனில், தமிழிசைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் நிஷா வரவேற்றார்.
கருத்தரங்கில், சட்டம் பழகு குழுவின் நோக்கம் குறித்தும், செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
