/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காணும் இடமெல்லாம் கசிவு பல லட்சம் லிட்டர் நீர் வீண்
/
காணும் இடமெல்லாம் கசிவு பல லட்சம் லிட்டர் நீர் வீண்
காணும் இடமெல்லாம் கசிவு பல லட்சம் லிட்டர் நீர் வீண்
காணும் இடமெல்லாம் கசிவு பல லட்சம் லிட்டர் நீர் வீண்
ADDED : செப் 11, 2024 12:11 AM

அன்னூர்:அன்னூர் வட்டாரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அத்திக்கடவு குழாய் உடைப்பால், பல லட்சம் லிட்டர் நீர் வீணாகிறது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அன்னூர் வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வருகிறது.
இதில் அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு உள்ள அல்லிகுளம் குளத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக ஏராளமான நீர் ஊற்று போல் தெறித்து விழுகிறது.
இதனால் குளத்தின் தெற்கு கரை சேதமடைந்துள்ளது. குளத்திற்கு வரும் நீரை கட்டுப்படுத்தும் ஓ.எம். எஸ். கருவி நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் அடிபாகமும், கரைந்து வருகிறது.
இதே போல், அன்னூரில் இருந்து பிள்ளையப்பம்பாளையம் செல்லும் வழியிலும் கடந்த மூன்று நாட்களாக அத்திக்கடவு குழாயில் கசிவு ஏற்பட்டு, ஏராளமான நீர் வீணாகிறது. குன்னியூர் கைகாட்டி, ஓதிமலை ரோட்டில் வடக்கலூர் என, ஐந்து இடங்களில் அத்திக்கடவு நீர் வீணாகிறது.
உடனடியாக அதிகாரிகள் குழாய் கசிவை சரி செய்து, வீணாக செல்லும் பல லட்சம் லிட்டர் நீர், குளத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.