/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு பொம்மை செய்ய பயிற்சி
/
குழந்தைகளுக்கு பொம்மை செய்ய பயிற்சி
ADDED : மே 08, 2024 12:28 AM
கோவை:மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ஏ.ஐ.சி.டி.,யின் ஐடியா லேப் சார்பில், குழந்தைகளுக்கு பொம்மை உருவாக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதில், மூன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3டி பிரிண்டிங், லேசர் கட்டிங் மற்றும் வுட் ரவுட்டர் மெசின் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொம்மைகளை உருவாக்க கற்றுக் கொடுக்கப்படுகிறது
கல்லுாரி தாளாளர் சரஸ்வதி கூறுகையில், ''தாங்கள் விளையாடும் பொம்மைகளை தாங்களே உருவாக்க குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளின் புதிய சிந்தனைகளை துாண்ட இது உதவும்'' என்றார்.
மே மாதம் முழுவதும், வாரம் ஒரு முறை இப்பயிற்சி நடைபெறும் என்றும் பயிற்சியில் கலந்து கொள்ள, 96779 17353 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் ஜெயா தெரிவித்தார். இந்துஸ்தான் கல்லுாரிகளின் முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், டீன் மகுடேஸ்வரன், துறைத் தலைவர் சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

