/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டுத்தன்மையோடு இருப்போம் ஆனந்தத்தை மீட்டெடுப்போம்: சத்குரு
/
விளையாட்டுத்தன்மையோடு இருப்போம் ஆனந்தத்தை மீட்டெடுப்போம்: சத்குரு
விளையாட்டுத்தன்மையோடு இருப்போம் ஆனந்தத்தை மீட்டெடுப்போம்: சத்குரு
விளையாட்டுத்தன்மையோடு இருப்போம் ஆனந்தத்தை மீட்டெடுப்போம்: சத்குரு
ADDED : ஆக 28, 2024 11:35 PM

நாட்டின் ஆயிரக்கணக்கான தலைமுறையாய் செழுமைப்பட்டிருந்த கிராமங்களையும், அதன் கலாசாரத்தையும் கொண்டாடும், ஒரு தனித்துவமான ஒரு திருவிழா தான் 'ஈஷா கிராமோத்சவம்'. அதாவது, கிராமங்களின் கொண்டாட்டம்.
விளையாட்டில், கிராம இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கும் வகையில், ஈஷா கிராமோத்சவம், கடந்த 2004ம் ஆண்டு மிக சிறிய அளவில் கோபியில் துவங்கப்பட்டது.
இன்று, தென் மாநில அளவில், 5 மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நடந்து வருகிறது.
கிராமப்பகுதிகளில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிப்பதன் வாயிலாக, மது, புகை உட்பட தீய பழக்கங்களில் இருந்து அவர்கள் மீள்வதாக, தங்கள் அனுபவங்களை கிராம மக்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.
ஈஷா கிராமோத்சவத்தில், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து, சத்குரு கூறியுள்ளதாவது:
ஒரு காலத்தில் நமது கலாசாரத்தில் விதை விதைப்பது, நாற்று நடுவது, களைபறிப்பது என, எல்லா நேரத்திலும் ஆட்டம், பாட்டம் இருந்தது.
ஆனால், இப்போது அப்படியில்லை. வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லையென்றால், வாழ்க்கை சுமையாகி விடும். எனவே, ஆனந்தத்தை மீட்டெடுக்க நாம் அனைவரும் விளையாட்டுத் தன்மையோடு இருப்பது அவசியம்.
விளையாட்டு என்பதை துவக்கப்புள்ளியாக கொண்டால், மனிதனின் பொருளாதார, சமூக, ஆன்மிக வளர்ச்சிகளையும் எளிதில் அடைந்து விடலாம்.
அனைத்துக்கும் மேலாக, இந்த வாழ்க்கை எனும் விளையாட்டில் தான், ஒவ்வொரு மனிதனும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

