/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் வளர்ப்போம்... பூமியை காப்போம்! இன்று உலக ஓசோன் தினம்
/
மரம் வளர்ப்போம்... பூமியை காப்போம்! இன்று உலக ஓசோன் தினம்
மரம் வளர்ப்போம்... பூமியை காப்போம்! இன்று உலக ஓசோன் தினம்
மரம் வளர்ப்போம்... பூமியை காப்போம்! இன்று உலக ஓசோன் தினம்
ADDED : செப் 15, 2024 11:43 PM

வளிமண்டலத்தில் நிலவும் ஒரு வாயு ஓசோன் (O3) எனும் வாயு அடுக்காகும். சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுத்து கூடுதலான வெப்பத்தை குறைத்து, பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம்.
கடந்த, 1970ல், ஹாலோஜான் வாயுக்கள், குளோரா, புளுரோ கார்பன்கள், புரோமின் போன்ற தொழிற்சாலை கழிவுகள், குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி போன்ற வீட்டு உபயோக பயன்பாட்டினாலும், காடு அழிப்பு, நகர மயமாக்கத்தின் விளைவுகளாலும், இப்படலம் மிகவும் பாதிப்படைந்து, கரைய துவங்குவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
இதை உணர்ந்த உலக நாடுகள், கடந்த, 1987ல் செப்.,16ம் தேதி, கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படலத்தை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அந்த தினமே, 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்ததால் பூமியில் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும்.
தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படலாம் என்பதால், ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 'ஓசோன் வாழ்க்கை: 35 ஆண்டுகள் உலகளாவிய ஒத்துழைப்பு,' என்பது கருப்பொருளாகும்.
உறுதியேற்போம்!
சுற்றுச்சூழலையும், பூமியையும் காப்பாற்ற உறுதியேற்க வேண்டும். மின் சாதனங்கள் தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்போம். குளிர்பதன கருவிகள் பயன்பாட்டை குறைப்போம்.
பசுமையான வாழ்க்கை முறையை கடைபிடித்து, சுற்றுச்சூழல் சவால்களை நிவர்த்தி செய்ய மரங்கள் வளர்ப்போம். பிரபஞ்சத்தை பாதுகாக்கவும், சூரியனின் கேடுகளை தடுக்கவும், ஓசோன் பரப்பை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்போம்!