/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்திப்போம், பேசுவோம்! * நடக்குது பூமி பூஜை; நடக்கவில்லை வேலை * கமிஷனரிடம் 'டைம்' கேட்கும் கவுன்சிலர்கள்
/
சந்திப்போம், பேசுவோம்! * நடக்குது பூமி பூஜை; நடக்கவில்லை வேலை * கமிஷனரிடம் 'டைம்' கேட்கும் கவுன்சிலர்கள்
சந்திப்போம், பேசுவோம்! * நடக்குது பூமி பூஜை; நடக்கவில்லை வேலை * கமிஷனரிடம் 'டைம்' கேட்கும் கவுன்சிலர்கள்
சந்திப்போம், பேசுவோம்! * நடக்குது பூமி பூஜை; நடக்கவில்லை வேலை * கமிஷனரிடம் 'டைம்' கேட்கும் கவுன்சிலர்கள்
ADDED : ஆக 22, 2024 11:49 PM

கோவை:கோவை மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து, வளர்ச்சிப் பணிகள் தேங்கியிருப்பது தொடர்பாக முறையிட, 'டைம் கொடுங்கள்' என, மேற்கு மண்டல கவுன்சிலர்கள், 20 பேரும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. பொது நிதியில் இருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வீதம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படுகிறது. வார்டுகளில் என்னென்ன பணி செய்ய வேண்டுமென சம்மந்தப்பட்ட கவுன்சிலர்கள் பரிந்துரை செய்து, மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிரதான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றிய பின், டெண்டர் கோரப்படும். இத்தகைய நடைமுறையை பின்பற்றி, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்ட பல்வேறு வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை என, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் குமுறல்
லோக்சபா தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக பூமி பூஜை போடப்பட்ட பணிகள் கூட இன்னும் துவங்கப்படவில்லை என கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.
இதுதொடர்பாக, ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால், 'ஏற்கனவே செய்த பணிகளுக்கு மாநகராட்சியில் இருந்து பில் தொகை தருவதில்லை; எங்களால் எப்படி வேலை செய்ய முடியும்' என கேட்கின்றனர்.
டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை போட்டும் இன்னும் வேலை துவங்காத பணிகள் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். 'டைம்' வாங்கிக் கொடுங்கள்; 20 கவுன்சிலர்களும் நேரில் வருகிறோம் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஒதுக்கவில்லை
இதுதொடர்பாக, கமிஷனரிடம் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு, 'ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐ.சி.சி.சி., வளாகத்தில் கணக்கு பிரிவு கூட்டம் நடக்கிறது. அங்கு சந்திக்கலாம்' என, கமிஷனர் கூறியதாக, கவுன்சிலர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், முதல்கட்டமாக குடிநீர் பணிகள் தொடர்பான பில்கள் வழங்க அறிவுறுத்தியுள்ளதாக, கமிஷனர் கூறியதாக, உதவி கமிஷனர் சந்தியா தெரிவித்தார். ஆனால், மேற்கு மண்டல கவுன்சிலர்கள் நேரில் சந்திக்க, கமிஷனர் 'டைம்' ஒதுக்கிக் கொடுக்கவில்லை.