/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 3 நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்ப்பு
/
கோவையில் 3 நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 02:25 AM
பொள்ளாச்சி;கோவைமாவட்டத்தில்,மூன்று நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை, 30--32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21--22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மழையைப் பயன்படுத்தி, இறவையில் மக்காச்சோளத்தை விதைக்கும் முன் இமிடாகுளோபிரிட் மருந்தை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து, பின் விதைக்கவும்.
மக்காச்சோளம் விதைத்த மூன்று நாட்களுக்குள், அட்ரசின் என்ற முளைக்கும் முன்,களைக்கொல்லியை, ஏக்கருக்கு 400 கிராம் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.