/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர் காற்றுடன் பெய்யும் சாரல் மழை; 'குளுகுளு' வென மாறிய சீதோஷ்ணம்
/
குளிர் காற்றுடன் பெய்யும் சாரல் மழை; 'குளுகுளு' வென மாறிய சீதோஷ்ணம்
குளிர் காற்றுடன் பெய்யும் சாரல் மழை; 'குளுகுளு' வென மாறிய சீதோஷ்ணம்
குளிர் காற்றுடன் பெய்யும் சாரல் மழை; 'குளுகுளு' வென மாறிய சீதோஷ்ணம்
ADDED : ஜூன் 27, 2024 09:51 PM

உடுமலை : உடுமலை பகுதியில், சாரல் மழையால், சீதோஷ்ண நிலை 'குளுகுளு'வென மாறியுள்ளதுடன், நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
உடுமலை பகுதியில், இந்தாண்டு கோடை காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. வழக்கத்தை விட கூடுதல் வெயிலும், வறட்சியான காற்றும் வீசியது.
இதனால், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, பல்வேறு சாகுபடி பணிகள் பாதித்தது; தென்னை மரங்களுக்கு, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றினர்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, கோடை கால மழை, பரவலாக பெய்ததால், வறட்சி நீங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். அந்த சீசன் மழை நீண்ட நாட்கள் நீடிக்காததால், நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை.
தென்மேற்கு பருவமழையும் குறித்த நேரத்தில் துவங்கவில்லை. காலதாமதமாக இந்த சீசன் துவங்கி, தற்போது உடுமலை பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
பகல் முழுவதும் மேகமூட்டம் காணப்படுவதுடன் சாரல் மழையால், சீதோஷ்ண நிலையும் 'குளுகுளு'வென மாறியுள்ளது. குளிர்காற்றும் வீசி வருகிறது.
வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மழை தீவிரமடைந்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. நேற்று அதிகபட்சமாக, 30 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கே சீதோஷ்ண நிலை இருந்தது.
பருவமழை தீவிரமடைந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தால், ஆடிப்பட்டம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். கோடை உழவு செய்துள்ள பகுதிகளில், மானாவாரி சாகுபடிக்கான விதைப்பு செய்யவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.