ADDED : ஜூன் 14, 2026 01:50 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் சிங்கப்பெண் சிறப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு அருகே, முள்ளுப்பாடியில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் பகவதிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி, கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பிரச்னை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும். சிங்கப்பெண் படைக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
