/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வில் முன்னேற ஆசிரியர் சொல்வதை கேளுங்க! மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை
/
வாழ்வில் முன்னேற ஆசிரியர் சொல்வதை கேளுங்க! மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை
வாழ்வில் முன்னேற ஆசிரியர் சொல்வதை கேளுங்க! மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை
வாழ்வில் முன்னேற ஆசிரியர் சொல்வதை கேளுங்க! மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை
ADDED : ஆக 28, 2024 11:56 PM

உடுமலை : ''வாழ்க்கையின் இலக்கை நோக்கிச்செல்வதற்கு, பள்ளியில் ஆசிரியர்கள் கூறுவதை கீழ்படிதலுடன் கேளுங்கள்'' என, முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு கூறினார்.
பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
விழாவுக்கு பள்ளித்தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் சேஷாசலம், துணைத்தலைவர் மணி, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு பேசியதாவது:
ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்களுக்கு அன்பு காட்டி அறநெறிப்படுத்தும் வழிகாட்டியாவார்கள். ஆசிரியர்கள் கூறுவதை மனதில் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, மாணவர்கள் அதை நடைமுறையிலும் பின்பற்றினால், கட்டாயம் வாழ்வின் இலக்கை எட்ட முடியும்.
பள்ளிகளில், துவக்க நிலை வகுப்பு முதல் மாணவர்களை, பள்ளிகட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு, ஒவ்வொரு ஆசிரியரும் திறம்பட செயல்படுகின்றனர்.
நான் படித்த பள்ளியின் ஆசிரியர், எங்களுக்கு புத்தக பாடத்தையும் கூட நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு நடத்துவார்.
மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து, பல உயர்பதவிகளை அடைந்தாலும், ஆசிரியர்கள் என்றும் உங்களை கனிவான மாணவராகவே நடத்துவார். அதேபோல், நீங்கள் எந்த பதவிக்கு சென்றாலும், உங்களின் ஆசிரியரை மிஞ்ச முடியாது.
வாழ்வில் முன்னேற, மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கு கீழ்படிய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், பெற்றோர், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.